நாம் மறந்துவிட்ட நோய்களை தடுத்த உணவுமுறைகள் இவை தான் தெரிந்து கொள்ளுங்கள் ..!

நாம் மறந்துவிட்ட நோய்களை தடுத்த உணவுமுறைகள் இவை தான் தெரிந்து கொள்ளுங்கள் ..!

நிற்ககூட நேரமில்லாத இந்த வேகமான நாகரீக உலகத்திலே நாம் அன்றாடம் மருத்துவமனைக்கு மட்டும் வாழ்கையின் பாதி நேரத்தை, பணத்தையும் செலவு செய்கிறோம். சில காலத்திற்கு முன்பு வரை அதற்கான விடை தெரியாமல் நாம் திணறித்தான் இருந்தோம். ஆனால் இன்று நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத்துவங்கியுள்ளோம்.

ஆம்! நாம் தவறவிட்ட உணவு பழக்கங்களினால் தான் இதனை நோய்களும் இடர்பாடுகளும். நமது பாரம்பரிய உணவுமுறையில் நம் உடலுக்கு தேவையான அதனை கார்போஹைட்ரேட், ப்ரோடீன், வைட்டமின், கொழுப்புச்சத்து என்று எல்லாமும் சமநிலையில் உள்ளது. நாம் அதை மறந்துவிட்டு இன்றைய காலபோக்கில் மாடர்ன் என்றும் நாகரீகம் என்றும் உண்ணும் பிசா, பர்கர் நமக்கு எந்த விதமான சத்துக்களையும் வழங்குவதில்லை மேலும் நம்மை நோயாளியாகவே மாற்றுகிறது.

சரி அந்த உணவு முறை என்ன? அதை விளக்குங்கள் என்று கேட்கிறீகளா? இதோ உங்களுக்கான விடை! பெரிய கட்டுரையாகவெல்லாம் கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் பாட்டனார்கள் கூறிய பழமொழிகளே அதற்கு விடையாகி நிற்கன்றன. அந்த பழமொழிகளை இங்கு தெரிந்துகொள்வோம்.

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.வாழை வாழ வைக்கும்.அவசர சோறு ஆபத்து.இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
குடல் புண்நலம் பெற , இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை

இருமலை போக்கும் வெந்தயக்கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்
வெப்பம் தணிக்க கம்பங்களி. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி. கொழுப்பை குறைக்க பன்னீர் திராட்சை

சித்தம் தெளிய வில்வம். கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம். சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.செரிமான சக்திக்கு சுண்டைக்காய்

Share this post

Post Comment