மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைத்துவிடும். மூளையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் உண்ணும் உணவு அடிப்படையாக அமைகிறது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.
ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? இதற்குக் காரணம் நாம் நம் மூளைக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உணவை உண்பதில்லை என்பதே. கரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு ஆகிய உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.
இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம். மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் கொழுப்பு அமிலமே தினமும் இதற்கு தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.
மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடம்.
விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் யாருக்கெல்லாம் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்ததோ அவர்களுக்கெல்லாம் நல்லஞாபக சக்தியும் சிறப்பான மூளைச் செயல்பாடுகளும் இருந்துளளது. ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லயிட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்துள்ளனர்.
பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளையை குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.