நோய்களை எதிர்க்கும் பப்பாளி மற்றும் எலுமிச்சை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..!

நோய்களை எதிர்க்கும் பப்பாளி மற்றும் எலுமிச்சை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..!

பப்பாளி பெரும்பாலான பெண்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. இயற்கையாகவே இந்த பழத்தில் ஒளிந்துள்ள விட்டமின்கள் அதிகம். அதிலும் பப்பாளி மற்றும் எலுமிச்சை இரண்டும் இணைந்தால்!!!

வாருங்கள் அதன் நன்மைகளையும் பயன்களையும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
பப்பாளி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.நமது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கின்றன.

நோய்களை எதிர்க்கும் பப்பாளி மற்றும் எலுமிச்சை :
பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளது.இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுகின்றது. ஆகவே இந்த கலவையை தினமும் ஒருவர் பருகி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.
நோய்கள் விரைவில் அண்டாது அஞ்சி ஓடிடும்.

புற்றுநோயை தடுத்திடும் :
உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயினை பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறுகள் தடுத்து நிறுத்தி மெல்ல அழித்திடும் வல்லமை உடையது.இரண்டிலுமுள்ள மூலபொருட்களானது ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களான குடல் புற்றுநோய் மற்றும் இரத்தம் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, அசாதாரண செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுத்து அழிக்கின்றது.

ஜீரனசக்தியை தூண்டிடும் :
பப்பாளி எலமிச்சை கலவையில் உள்ள வைட்டமின்கள், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
மேலும் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கின்றது.

மன அழுத்தத்தை குறைத்திடும் :
பப்பாளி, எலுமிச்சை கலவையில் உள்ள வைட்டமின் சி, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்கின்றது.

பழச்சாறு செய்முறை :
தேவையான அளவு பப்பாளி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1ஸ்பூன் எலுமிச்சை பழச் சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.

தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இவ்வாறாக தொடர்ச்சியாக பருகி வந்தால் உடல் நலம்பெற்று வாழ்வு சிறக்கும்.

Share this post

Post Comment