இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா?

இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா?

சர்க்கரை நோயுடன் வாழ்வது என்பது எளிதானது அல்ல. சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்களது இரத்த சர்க்கரை அளவானது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அதில் எவ்வளவு நேரம் தூங்குகிறோம், எவ்வளவு சுறுசுறுப்புடன் இருக்கிறோம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, எந்த உணவை சாப்பிடக்கூடாதோ அந்த உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும்.

ஆனால் சில ருசியான உணவுகள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதாக இருக்கும். இந்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற அந்த ருசியான உணவுகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உட்கொண்டு மகிழுங்கள்.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெய் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பிரேசிலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் தினமும் காலை உணவின் போது சில டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய் உட்கொண்டவர்களின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்ததில், வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடாதவர்களின் இரத்த சர்க்கரை அளவை விட குறைந்திருப்பது தெரிய வந்தது. அதற்காக வெறும் வேர்க்கடலை வெண்ணெய் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை, பாதாம் வெண்ணெய், வால்நட்ஸ் அல்லது இதர வகை நட்ஸை சாப்பிட்டாலும், இந்த நன்மை கிடைக்கும்.

ரெட் ஒயின்
ரெட் ஒயினை ஒருவர் மிதமான அளவில் குடித்து வந்தால், குடல் க்ளுக்கோஸ் உறிஞ்சுவதைத் தடுத்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். சமீபத்திய ஆய்வில் ரெட் ஒயின் இரத்த சர்க்கரை அளவிலும், எடை குறைப்பிலும் பெரும் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக எதுவானாலும் அது பிரச்சனைகளை உண்டாக்கும். அதிலும் ரெட் ஒயினை அளவுக்கு அதிகமாக ஒருவர் குடித்தால், அது கல்லீரலைச் சுற்றி கொழுப்புக்களைத் தேங்க செய்யும். எனவே ஒரு நாளைக்கு ஒரு டம்ளருக்கு மேல் குடிக்காதீர்கள்.

வெங்காயம் மற்றும் பூண்டு சாறு
ஆய்வு ஒன்றில் மிருகங்களைக் கொண்டு சோதனை செய்ததில், வெங்காயம் மற்றும் பூண்டு சாறு இரத்த சர்க்கரை அளவில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. அதுவும் இந்த ஆய்வில் எலி மற்றும் முயல் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்திருப்பது தெரிய வந்தது. அதற்காக இந்த இரண்டு சாற்றினையும் அதிகளவில் உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சிறிது அளவாக சாப்பிட்டாலே போதுமானது.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து, ஸ்டார்ச் நிறைந்த உணவை உட்கொண்ட பின்பும் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்காமல் தடுக்கும் என்று சமீபத்தில் வெளிவந்த நீரிழிவு பத்திரிக்கையில் வெளிவந்தது. எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நினைத்தால், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடியுங்கள்.

முட்டை
சமீபத்திய ஆய்வு ஒன்றில், தினமும் காலை உணவின் போது 2 முட்டையை உட்கொண்டால், முட்யை காலை உணவாக சாப்பிடாதவர்களை விட 65% உடல் எடை குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரது உடல் எடை கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் முட்டையை சேர்ப்பது நல்லது.

டார்க் சாக்லேட்
சாக்லேட் என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். 2011 இல் வெளிவந்த ஆய்வில் டார்க் சாக்லேட், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதாக தெரிய வந்தது. அதிலும் டார்க் சாக்லேட்டை மிதமான அளவில் சாப்பிடுவதன் மூலம், இரத்த அழுத்தம் குறைவதோடு, இரத்த நாளங்களின் செயல்பாடு மேம்படுவதாக, அதே ஆய்வில் கண்டறியப்பட்டது. சாக்லேட்டில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.

க்ரீன் டீ
சர்க்கரை நோயாளிக்கான சிறப்பான ஒரு பானம் என்றால் அது க்ரீன் டீ. ஆய்வு ஒன்றில் சர்க்கரை நோய் உள்ள எலி ஒன்றிற்கு க்ரீன் டீ கொடுக்கப்பட்டது. இதனால் அந்த எலிக்கு இருந்த டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அச்சம் கொள்ளாமல் க்ரீன் டீயைக் குடியுங்கள்.

வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் டைப்-2 சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, டைப்-1 சர்க்கரை நோய்க்கும் நல்லது. வெந்தய விதைகள் இரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ் மற்றும் கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அன்றாட சமையலில் வெந்தயத்தை சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

Share this post

Post Comment