ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?

தினமும் ஒரு பௌல் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டை சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆனால் அப்படி சாப்பிடும் போது சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவோம்.

ஏனெனில் இவற்றில் அழுக்குகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் அதிகம் நிறைந்திருக்கும் என்று நினைத்து தான். ஆனால் நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தோலுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் தான் அதிலிருக்கும் முழு சத்துக்களையும் நாம் பெற முடியும். இது தெரியுமல் சிறு வயதில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டு வருகிறோம்.சரி, இப்போது எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தோலுடன் சாப்பிடுவது நல்லது என்று காண்போம். அதைப் படித்து இனிமேல் அவற்றை தோலுடன் சாப்பிட மறக்காதீர்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு நிலத்திற்கு அடியில் விளையும் ஒரு காய்கறியாகும். உருளைக்கிழங்கின் உட்பகுதியை விட, அதன் தோலில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கை .எடுத்துக் கொண்டால், அதன் தோலில் உள்ள பீட்டா-கரோட்டீன், செரிமானத்தின் போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடையும். வைட்டமின் ஏ சத்தானது, செல்களின் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும்.

கேரட்
கேரட்டின் தோலில் பாலிஅசிட்டலின் என்னும் கெமிக்கல் உள்ளது. அதோடு ஆன்டி-பாக்டீரியல், அழ்ற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவையும் உள்ளது. கேரட்டை விட அதன் தோலில் தான் அதிகளவிலான பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. எனவே கேரட்டை சாப்பிடும் முன், அதன் தோலை நீக்காமல், நீரில் நன்கு சுத்தமாக கழுவிய பின்பு அப்படியே உட்கொள்ளுங்கள்.

கேரட்
கேரட்டின் தோலில் பாலிஅசிட்டலின் என்னும் கெமிக்கல் உள்ளது. அதோடு ஆன்டி-பாக்டீரியல், அழ்ற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவையும் உள்ளது. கேரட்டை விட அதன் தோலில் தான் அதிகளவிலான பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. எனவே கேரட்டை சாப்பிடும் முன், அதன் தோலை நீக்காமல், நீரில் நன்கு சுத்தமாக கழுவிய பின்பு அப்படியே உட்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் தோல் சில சமயங்களில் பார்ப்பதற்கு முட்களைக் கொண்டது போன்று, சற்று அருவெறுப்பாகவும் இருக்கும். ஆனால் வெள்ளரிக்காயின் தோலில் பல்வேறு ஆன்டி-ஆஙகஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலை பல்வேறு நோய்களிடமிருந்து பாதுகாப்புடன் வைத்திருக்கும். மேலும் வெள்ளரிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்றவையும் உள்ளது. ஆகவே அடுத்த முறை வெள்ளரிக்காய் சாப்பிடும் போது, அதன் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.

ஆப்பிள்
பலரும் ஆப்பிள் சாப்பிடும் போது அதன் தோலை நீக்கி விட்டு சாப்பிட நினைப்பார்கள். ஆனால் ஆப்பிள் பழத்திலேயே இதில் தோலில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதோடு, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றன. முக்கியமாக ஆப்பிளின் தோலில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நுரையீரல் செயல்பாட்டிற்கு உதவி, சுவாசப் பிரச்சனைகளைத் தடுத்து, இதர சுவாவ சுவாசனைகளையும்

சிட்ரஸ் பழங்கள்
பெரும்பாலான சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். சொல்லப்போனால் சிட்ரஸ் பழங்களில் ரிபோப்ளேவன், வைட்டமின் பி6, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளது. பொதுவாக ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்றவற்றின் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இதன் தோலை வெயிலில் உலர்த்தி, அதன் பொடியை விருப்பமான உணவுப் பொருட்களின் மீது தூவி சாப்பிடுங்கள்.

கிவி
கிவி பழத்தை பலர் ஸ்பூன் கொண்டு உள்ள கனிந்த பகுதியைத் தான் சாப்பிடுவோம். ஆனால் கிவிப் பழத்தின் தோல் கூட சுவையாக இருக்கும் என்பது தெரியுமா? சொல்லப்போனால் கிவி பழத்தின் தோலில் ஃப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள், கனிந்த பகுதியை விட அதிகளவில் உள்ளது. முக்கியமாக இதன் தோலில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து நிரம்பியுள்ளது.

மாம்பழம்
மாம்பழத்தின் தோலில் ரெஸ்வெராட்ரோல் என்னும் கொழுப்பைக் கரைக்க உதவும் மற்றும் முதிர்ந்த கொழுப்பு செல்களின் உற்பத்தியைத் தடுக்கும் பொருள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாம்பழத்தின் கனிந்த பகுதியையும் ஆய்வாளர்கள் சோதித்தனர். ஆனால் அதில் இம்மாதிரியான பொருள் ஏதும் இல்லை. எனவே மாம்பழத்தினால் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், தோலுடன் சாப்பிடுங்கள்.

Share this post

Post Comment