எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ!

எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ!

எழுத்து உலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார், இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, எழுத்து உலகில் பெரிய பொக்கிஷம் என்று ரஜினி பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

ரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தின் வசனகர்த்தாவாக இருந்தவர் பாலகுமாரன். ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்துக்கு சொந்தக்காரர். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தின் வசனமும் இவரின் கைவண்ணம் தான்.

அவர் இழப்பை சாதாரணமாக என் கண்ணீர் அஞ்சலி என்று முடித்துவிட முடியாது எனக்கு உண்மையான ஆன்மிகம் கற்றுக் கொடுத்த புண்ணிய ஜீவன். கருகி கதறி அழத்தான் முடியும் என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.இயக்குனர் அட்லீ நேரில் சென்று அவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் அட்லீயிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். பாலகுமாரன் அவர்களை பல வருடங்களாக அட்லீக்கு பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது .

Share this post

Post Comment