உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே

உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே

அதிகப்படியான வேலை, அலைச்சல் ஆகியவற்றால் உடலில் வலி ஏற்பட்டு அவதிபடுபவர்கள், வாத நாராயண இலையை அரைத்து துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

மேலும், இந்த இலையின் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து காண்போம்.

மூட்டுவலிக்கு அருமருந்து
கணினி மற்றும் கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடுதல், இரவில் கண்விழித்தல், அதிக கவலை, அதிகப்படியான வேலை, மலச்சிக்கல் போன்றவற்றால் உடலில் நச்சு அதிகரித்து மூட்டுகளில் வலி ஏற்படும்.

இதனை சரிசெய்ய, வாத நாராயணா இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி குடித்து வர வேண்டும். இதன்மூலம், மூட்டுகளில் வலி குறையும்
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதிபடுவோர், வாத நாராயணா இலை நீரை குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து, மலச்சிக்கல் குணமாகும். மேலும், உடல் அசதியைப் போக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மேலும், வாத நாராயணா இலைகளை, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழைகள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மற்றும் இந்துப்பு சேர்த்து, அம்மியில் வைத்து துவையல் போல அரைத்து மதிய உணவில் சாப்பிட வேண்டும். இதன்மூலம், மலம் இளகி, உடலில் தங்கிய நச்சு வாயுக்கள் வயிற்றுபோக்குடன் வெளியேறும்.

உடல்வலி
சிற்றுண்டி வகைகளுடன் வாத நாராயணா இலைகளை சேர்த்து சாப்பிட, உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் வலிகள் தீரும். கை, கால் குடைச்சல் நீங்கும்.

ரத்த சர்க்கரை பாதிப்பு
வாத நாராயணா இலைகளின் சாறெடுத்து, அதில் விளக்கெண்ணை, திரிகடுகு, வெண்கடுகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் இலைச்சாறு எண்ணையுடன் கலந்து திரண்டு வரும்போது, ஆறவைத்து, இந்த மருந்தை, இரு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இதன்மூலம் ரத்த சர்க்கரை பாதிப்புகள் தீரும். குளிர் ஜுரம் சரியாகும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையும் சரியாகும்.

மேலும், வாத நாராயணா இலைகளை காயவைத்து, அரைத்து தூளாக்கி, அதில் அரை தேக்கரண்டி அளவு தூளை, தினமும் இருவேளை காய்ச்சிய நீரில் கலந்து பருக வேண்டும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பாகும்.

வாயுத்தொல்லை
வாயுத்தொல்லை தீர, நாராயணா இலைகள் மற்றும் விழுது இலை, மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை விளக்கெண்ணை விட்டு தாளித்து, ரசம் போல செய்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் கை, கால் குடைச்சல் மற்றும் மலச்சிக்கலும் நீங்கும்.

வாத நாராயணா பொரியல்
வாத நாராயணா இலைகள், இலச்சை கெட்ட கீரை மற்றும் முருங்கைக்கீரை இவற்றை எண்ணையில் வதக்கி, கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், உளுந்து மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து பொரியல் செய்து கொள்ள வேண்டும்.

இதனை வாரம் இருமுறை சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சு வாயு, நச்சு நீர் வெளியேறி, மலச்சிக்கல் குணமாகும். மேலும் வாத வலிகள், சுளுக்கு மற்றும் மூட்டு பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும்.

உடல் வீக்கம் மற்றும் கட்டிகள்
உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு, விளக்கெண்ணையில் வாத நாராயணா இலைகளை வதக்கி, அதை கட்டிகள், வீக்கத்தில் தடவி வர, அவை விரைவில் குணமாகும்.

வாத நாராயணா தைலத்தின் நன்மைகள்
வாத நாராயணா வேரை பொடி செய்து, அதில் தயிர் கலந்து குடிக்க, ரத்தபேதி விலகும். அனைத்து வாத வியாதிகளையும் வாத நாசினி தைலம் போக்கும்.

வாத நாராயணா இலைச்சாற்றுடன், வெற்றிலை, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இலைச்சாறுகள், திரிகடுகு, மஞ்சள், பெருஞ்சீரகம், சீரகம், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்பெண்ணை இவற்றைத் தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.

பின்னர் அதில் எருக்கம்பூக்களை இட்டு, நன்கு காய்ச்சி, ஆறவைத்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை முகத்தில் தடவி வர, பக்க வாத பாதிப்பால் உடலில் ஏற்பட்ட முக பாதிப்புகள், பேச்சு, பார்வை கோளாறுகள் குணமாகும்.

நரம்பு பாதிப்புகள் விலகும். மேலும் கால் வலி, உடல் வலி, மூட்டு வீக்க, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றையும் சரி செய்யும். வாத நாராயண கொழுந்தை அரைத்து, விரலில் வைத்து கட்டினால் நகச்சுத்தி தீரும்.

Share this post

Post Comment