சிவப்பழகு பெற வேண்டுமா? இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்

சிவப்பழகு பெற வேண்டுமா? இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்

நம் முகத்தை அழகாக்க வேண்டும் என்றாலே நாம் முதலில் நாடுவது அழகு நிலையங்களைத் தான். ஆனால் அடிக்கடி கெமிக்கல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் முகழகு கெடவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத முகழகை பெற இயலும். பேஸ் பேக்குகள் உங்கள் முகத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு நல்ல நிறழகையும் கொடுக்கிறது. அதிலும் தயிரும் வாழைப்பழ பேஸ் பேக் உங்களுக்கு உடனடியான சிவப்பழகையும் பளிச்சென்ற பார்வையும் ஒரு நொடிப் பொழுதில் தந்து விடும்.

சரி வாங்க இந்த இரண்டு பொருளைக் கொண்டோ உங்க சிவப்பழகை மெருகேற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
1 பழுத்த வாழைப்பழம்

1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

பயன்படுத்தும் முறை வாழைப்பழம் ரெம்பவும் பழுத்திருக்க வேண்டாம். மீடியமான அளவில் பழுத்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள் தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும் 1/3 பங்கு யோகார்ட் இதனுடன் சேர்க்கவும் சாதாரணமான யோகார்ட்டை பயன்படுத்துங்கள். ப்ளோவர்டு யோகார்ட் வேண்டாம். நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்

அப்ளே செய்யும் முறை முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி கொள்ளுங்கள் இப்பொழுது தயாரித்த பேஸ் பேக் கலவையை முகத்தில் எல்லா இடங்களிலும் தடவுங்கள் கழுத்துப் பகுதியிலும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். கோடை காலமாக இருந்தால் ஒரு 15 நிமிடங்கள் அப்படியே இதை வைத்து இருங்கள். இதுவே குளிர் காலமாக இருந்தால் 20 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் பிறகு எப்பொழுதும் போல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ளுங்கள்

குறிப்பு இந்த பேஸ் பேக்கை 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கூட நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு பால் அழற்சி இருந்தால் யோகார்ட்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முழங்கையில் சிறிது அப்ளே செய்து பரிசோதனை செய்து கொண்டு அப்புறம் உபயோகிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பிறகு எந்த வித சரும வடுக்கள், அழற்சி போன்றவை ஏற்படவில்லை என்றால் நீங்கள் யோகார்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள பொட்டாசியம் உங்கள் சரும நிறத்தை மெருகேற்றும். சரும பிரச்சினைகளை இயற்கையாகவே எதிர்த்து போரிடுகிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்கி மாசு மருவற்ற முகழகை தருகிறது. சரும சுருக்கங்கள் இருந்தால் அதற்கு எதிராக செயல்பட்டு சருமத்தை இளமையாக காக்க உதவுகிறது.

யோகார்ட்
இதிலுள்ள ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் முகம் எப்போதும் ப்ரஷ்ஷாக ஜொலிக்க முடியும். எண்ணெய் பசை சருமம், பருக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. 50 வயதை அடைந்தவர்கள் தங்களது இளமையை தக்க வைக்க இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒட்டுமொத்த பயன்கள்
பருக்கள், சரும பிரச்சினைகள், சருமம் வயதாகுதல் போன்றவற்றை போக்கி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது.
என்னங்க உங்கள் முகத்தில் உள்ள டென்ஷன், களைப்பு இவற்றையெல்லாம் போக்கி அழகாக ஜொலிக்க இந்த இரண்டு பொருளை கையில் எடுத்திட்டிங்களா.

Share this post

Post Comment