கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம்?… என்ன சாப்பிடக்கூடாது?

கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம்?… என்ன சாப்பிடக்கூடாது?

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவு மிக முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் இந்த நேரத்தில் எடுத்து கொள்ளும் உணவு தான் அவர்களின் உடல் நலத்தையும், கருவின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கும்.

அதனால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும். அது தான் தாய்க்கும் நல்லது சேய்க்கும் நல்லது. அத்தகைய ஆரோக்கியமான உணவுகளை இங்கு பார்க்கலாம்.

முழு தானியங்கள்
ஊட்டச்சத்து மிக்க முழு தானியங்களில் செய்யப்பட்ட பிரட் போன்ற உணவுகளில் போலிக் ஆசிட், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்து உள்ளன. சாதம் மற்றும் சாதாரண பிரட் போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தானியங்களில் உள்ள சத்துகள் அதிகமானது. கர்ப்பிணி பெண்கள் மூன்று வேளை உணவிலும் முழு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும். காலை உணவிற்கு ஓட்ஸ், மதியத்திற்கு முழு தானியங்களில் தயாரிக்கப்பட்ட சான்ட்விச் மற்றும் டின்னருக்கு கோதுமை பாஸ்தா அல்லது பிரவுன் ரைஸ் போன்றவைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

நட்ஸ்
நட்ஸில் காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், செலினியம், ஜீன்க், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற மினரல்கள் அதிகமான அளவில் உள்ளது. மேலும் விட்டமின் ஈ சத்தும் அதிகமாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து அதிகமாக இருந்ததாலும், உடலுக்கு நன்மை தரக்கூடியது.

சாலமன் மீன்
சாலமன் மீனில் புரோட்டின் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் ஓமேகா-3 சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சாலமன் மீன்கள் கருவின் வளர்ச்சிக்கு துணை செய்யும். இது மட்டுமல்லாமல் இது தாய்மாரின் மனநிலையையும் சரியாக வைத்து கொள்ள துணை செய்யும்.

பால்
கர்ப்பிணி பெண்கள் பாலை பச்சையாக குடிக்க கூடாது. பதப்படுத்தப்படாத ஆடு அல்லது செம்மறி ஆடு பாலையும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட எல்லா உணவு வகைகளையும் அதாவது சீஸ் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும்.

காய்கறிகள்
நாம் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக காய்கறிகள் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். என்ன தான் கறி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவு வகைகளில் புரோட்டின் மற்றும் மினரல் சத்துகள் அதிகம் இருந்தாலும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துகளை நாம் உதாசீன படுத்த முடியாது. கர்ப்பிணி பெண்கள் கீரைகள், ப்ராக்கோலி, சர்க்கரைவள்ளி கிழங்கு, குடை மிளகாய், அவாக்கேடோ, தக்காளி, பச்சை பட்டாணி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

Share this post

Post Comment