வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் வழிகள்!

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் வழிகள்!

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வாயைச் சுற்றி அசிங்கமாக கருமையான படலம் இருப்பது. இந்த ஒரு விஷயத்தால் பல பெண்கள் தங்கள் தோற்றத்தில் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்.இப்படி ஒருவருக்கு வாயைச் சுற்றி கருமையான படலம் ஏற்படுவதற்கு ஹைப்பர்-பிக்மென்டேஷன், ஹார்மோன்கள், வேக்சிங், ஷேவிங் போன்றவை காரணங்களாக இருக்கலாம். வாயைச் சுற்றி கருமையான படலம் இருந்தால், அது சிரிக்கும் போது மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டால், அது இன்னும் மோசமாக இருக்கும்

சில சமயங்களில் வாயைச் சுற்றி ஏற்படும் வறட்சியும் கருமையான படலத்தை உருவாக்கலாம். அதோடு உடல் பருமன், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் புற்றுநோய் போன்றவையும் வாயைச் சுற்றி கருமையான படலத்தை உண்டாக்கலாம். எனவே ஒருவருக்கு வாயைச் சுற்றி ஏற்படும் கருமையான படலத்திற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், மருத்துவரிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வாயைச் சுற்றி இருக்கும் கருமையை ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை மற்றும் தேன் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் அதற்கு சமஅளவில் தேனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமை மறையும்.

சந்தன பவுடர் மற்றும் மஞ்சள் வாயைச் சுற்றி ஏற்படும் கருமையான படலத்தை சந்தனம் மற்றும் மஞ்சள் கலவைப் போக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை வாயைச் சுற்றி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

கடலை மாவு கடலை மாவு சரும நிறத்தில் மாயத்தை ஏற்படுத்தும். அதற்கு 1 டீஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்த, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சிறிது சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி உலர வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் கலவை வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இந்த இரண்டு பொருட்களையும் சரிசம அளவில் எடுத்து கலந்து, வாயைச் சுற்றி தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் கூட சரும கருமையைப் போக்கும். அதற்கு இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை வாயைச் சுற்றி தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் நீரால் கழுவ வேண்டும். இப்படி 2-3 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாயைச் சுற்றி தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். சர்க்கரையில் உள்ள க்ளைகோலிக் அதிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, வெள்ளையாக்கும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையும் சரும கருமையைப் போக்கும். இந்த இரண்டையும் கொண்டு வாயைச் சுற்றி ஏற்படும் கருமைப் படலத்தைப் போக்க பயன்படுத்தினால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

ஓட்ஸ் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை வாயைச் சுற்றி தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் கழித்து, நீரால் கழுவினால், வாயைச் சுற்றியுள்ள கருமை நீங்கும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை வாயைச் சுற்றி தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் கழித்து, நீரால் கழுவினால், வாயைச் சுற்றியுள்ள கருமை நீங்கும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு 1 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 3-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு 5 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வாயைச் சுற்றியுள்ள கருமை மெதுவாக குறைவதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு சாறு உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், வாயைச் சுற்றி ஏற்படும் கருமையான படலத்தைக் குறைக்க உதவும். அதற்கு ஒரு துண்டு உருளைக்கிழங்கை அரைத்தோ அல்லது சாறு எடுத்தோ, வாயைச் சுற்றி தடவி, நன்கு காயும் வரை அல்லது 20 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Share this post

Post Comment