ஒரு நாள் ஒருவேளை மட்டும் இப்படி சாப்பிடுங்க…. தொப்பை மின்னல் வேகத்தில் குறைந்திடுமாம்

ஒரு நாள் ஒருவேளை மட்டும் இப்படி சாப்பிடுங்க…. தொப்பை மின்னல் வேகத்தில் குறைந்திடுமாம்

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் OMAD டயட்டை பின்பற்றுங்கள். என்ன புரிய வில்லையா? OMAD என்பது ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட் ஆகும். இந்த டயட்டின் படி ஒருவர் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல், ஒரு மணிநேரம் மட்டும் எவ்வித தடையும் இல்லாமல் சாப்பிடலாம்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் விரதம் இருப்பதன் விளைவு குறித்து சோதனை செய்தார்கள். அதில் விரதம் இருந்ததில், மனிதர்களின் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவும், ஆரோக்கியமும் அதிகரிப்பதோடு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால், அதன் விளைவாக உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இக்கட்டுரையில் ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட் மேற்கொள்ளும் போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என அனைத்து விஷயங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட்
இந்த டயட்டின் பேரின் படி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இதனால் நாள் முழுவதும் எடுக்கும் கலோரிகளின் அளவுக் குறையும். இதன் விளைவாக உடல் எடை குறைவதோடு, செரிமானமும் மேம்படும். இதற்கு செய்ய வேண்டியது எல்லாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை, அந்த ஒரு வேளை உணவின் போது உட்கொள்ள வேண்டியது தான்.

பெரும்பாலானோர் இரவு நேரத்தில் தான் சாப்பிடுவார்கள். ஆனால் உங்களுக்கு எந்த வேளையில் சாப்பிட்டால் சரியாக இருக்குமோ, அந்த வேளையில் சாப்பிடலாம். சில சமயங்களில், இந்த டயட்டினை முதன்முதலாக ஆரம்பிப்பவர்கள், க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ மற்றும் சில திட உணவுகளான முட்டை அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் எந்த ஒரு டயட்டும் எடுத்த எடுப்பிலேயே உடலுடன் ஒத்துப் போகும் என்று கூற முடியாது.

OMAD டயட் எப்படி வேலை செய்கிறது?
ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டை மேற்கொள்ளும் போது, உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள நேடும். ஒருவர் 23 மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களானது, எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு, உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன.

இதன் விளைவாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டுவிடும். அதோடு இந்த டயட்டை மேற்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இப்போது OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.

Share this post

Post Comment