ஒரு நுளம்புத்திரி கொழுத்துவது நூறு சிகரெட் கொழுத்துவது மாதிரி…

ஒரு நுளம்புத்திரி கொழுத்துவது நூறு சிகரெட் கொழுத்துவது மாதிரி…

சிகரெட் புகைப்பது ஆபத்தானது என்பதை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.புகைத்துக் கொண்டிருப்பவர்களின் அருகில் நிற்பதும் ஆபத்தானது என்பதையும் அறிந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் நுளம்புத்திரிகளை புகைக்க விடுவது ஆபத்தானது என்பது பலருக்குத் தெரியாது. கதவுகள் யன்னல்கள் மூடப்பட்ட ஒரு பூட்டிய அறையினுள் ஒரு நுளம்புச் சுருளை கொழுத்தி வைத்து விட்டு ஒருவர் படுத்து உறங்குவது அவர் 100 சிகரெட்டுக்களை புகைப்பதற்கு ஒப்பானது என அண்மையில் புதிதாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

யன்னல்கள்,கதவுகள் திறந்திருக்கும் நிலையில்நுளம்புச்சுருள்களின் தாக்கம் குறைவாக இருந்தாலும்கூட நுளம்புச்சுருள்களில் இருந்து வெளிவரும் புகை நுளம்புகளிற்கு தீமையை ஏற்படுத்துவது போன்று மனிதனிலும் பல தீங்கானவிளைவுகளை ஏற்படுத்தும்.

தினமும் 10000 லீற்றர் காற்றை மனிதன் உள்ளெடுத்து வெளிவிடுகின்றான். இந்தக் காற்று புகைகள் நிறைந்ததாகவும் அசுத்தமானதாகவும் இருந்தால் அவை மென்மையான ஈரலிப்பான சுவாசப்பையிலே படிந்து பல நோய்களுக்கு வித்திடும்.

எனவே நுளம்புச்சுருள்களை பாவிப்பதை தவிர்த்து நுளம்புக்கடியிலிருந்து எம்மை பாதுகாக்க மாற்று வழிகளைக்கையாள்வது பாதுகாப்பானது.

Share this post

Post Comment