தலைவலி வருவதற்கு எதெல்லாம் காரணமா இருக்கும்-ன்னு தெரியுமா?

தலைவலி வருவதற்கு எதெல்லாம் காரணமா இருக்கும்-ன்னு தெரியுமா?

ஒருவர் தங்களது வாழ்நாளில் நிச்சயம் பலமுறை தலைவலியை சந்தித்திருப்போம். தலைவலி வந்தால் எப்படி இருக்கும் என்று அனைவருக்குமே தெரியும். தலைவலி வந்தால், அதனால் வலியை அனுபவிப்பதோடு மட்டுமின்றி, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.சரி, ஒருவருக்கு தலைவலி எதனால் வருகிறது என்று தெரியுமா? பெரும்பாலும் நாம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம். சரி எந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் தலைவலியை உண்டாக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள். இக்கட்டுரையில் ஒருவரது தலைவலிக்கு காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதோடு, அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தலைவலியில் இருந்து விடுபடுங்கள்.

காரணம் 1 நாம் ஒரு நாளைக்கு பலமுறை சாப்பிடுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் தான் எல்லாம் உள்ளது. ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிட்டால், அதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதிலும் பதப்படுத்தப்பட்ட ஜங்க் உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புக்கள் மட்டும் உள்ளதால், அது ஆரோக்கியத்தை பாதித்து, மோசமான ஆரோக்கியத்தின் ஒரு அறிகுறியாக தலைவலியின் மூலம் வெளிக்காட்டும்

தீர்வு உணவுப் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும். அதுவும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக முழு தானிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் உணவுகள், முட்டை, வால் நட்ஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பு: எப்போதும் இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு ஜங்க் உணவுகளை உட்கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஊட்டச்சத்துக்களை இழந்து, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

காரணம் 2 எப்போதெல்லாம் உணவுகளை சாப்பிடத் தவிர்த்தாலும், தலை வலிக்க ஆரம்பிக்கிறதா? இது இயற்கை நிகழ்வு தான். பொதுவாக நாம் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாக செயல்படுகையில், நாம் சாப்பிடுவதை மறந்துவிடுபோம். இப்படி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத போது, அது அறிவாற்றல் திறன்களை பாதிக்கும். அதோடு இது எரிச்சல், மோசமான மனநிலை மற்றும் தலைவலிக்கும் வழிவகுக்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு முறை சாப்பிடலாம்? ஒருவர் ஒரு நாளைக்கு 4-5 முறை உண்பது நல்லது. எப்போதும் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்வதன் மூலம், தலைவலி தடுக்கப்படுவதோடு, உடல் எடையையும் சீராக பராமரிக்கலாம். ஆகவே ஒரே நேரத்தில் உணவை அதிகளவு உண்பதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு இடைவெளியில் உண்பது சிறந்தது. அதுவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட்டாக ஸ்நாக்ஸ் வேளைகளில் உண்பது மிகவும் நல்லது.

காரணம் 3 மன அழுத்தம் வேண்டுமானால் தலைவலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அதிக மன அழுத்தத்தால் ஏற்படும் பதட்டம் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு, தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.தீர்வு மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழி, யோகா, தியானம், சுவாசப் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவைகளாகும். அதோடு குடும்பத்தினருடன் மனம் விட்டு சந்தோஷமாக பேசுவதன் மூலமோ அல்லது விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலமோ மன அழுத்தம் அடைவதைத் தடுக்கலாம்.

காரணம் 4 நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பவரா? அப்படியெனில் நிச்சயம் அடிக்கடி தலைவலியை சந்திக்கக்கூடும். ஆம், எவ்வித உடலுழைப்பும் இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக இல்லாமல், அதன் விளைவாக தலைவலி, நினைவுத்திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தீர்வு எவ்வளவு வேலை இருந்தாலும், 1 மணிநேரத்திற்கு ஒருமுறை சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 15 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இன்னும் சிறப்பான ஒரு வழி என்றால் அது கார்டியோ பயிற்சிகளில் ஈடுபடுவது. குறிப்பு: அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்தாலும், தலைவலியால் கஷ்டக்கூடும். எனவே அளவாக செய்யுங்கள்.

காரணம் 5 நம்மைச் சுற்றி செயற்கை நறுமணப் பொருட்கள் எப்போதும் உள்ளது. உங்களுக்கு வலுவான நறுமணங்கள் ஆகாது என்றால், அவற்றைத் தவிர்த்திடுங்கள். சிகரெட், பெயிண்ட், தரம் குறைவான ஊதுபத்திகள், அழகு சாதனப் பொருட்கள், மெழுகுவர்த்திகள், பெர்ஃப்யூம்கள் என அனைத்திலுமே செயற்கை நறுமணங்கள் நிறைந்துள்ளதால், அவற்றின் உபயோகத்தைத் தவிர்த்திடுங்கள்.

காரணம் 6 அதிகமான வேலைப்பளு காரணமாக, பலர் நிம்மதியான தூக்கத்தைத் தொலைத்துள்ளனர். இதனால் உடல் மற்றும் மூளைக்கு வேண்டிய போதுமான ஓய்வு கிடைக்காமல், தலைவலியை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே நன்கு ஓய்வெடுங்கள். இதனால் தலைவலியின்றி வேலையில் சிறப்பாக ஈடுபட முடியும்எவ்வளவு தூக்கம் அவசியம்? ஆய்வுகளின் படி, உடலியக்கம் சிறப்பாக இருக்க ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உங்கள் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க வேண்டுமானால், குட்டித் தூக்கம் போடுங்கள். பகல் நேரத்தில் 10 நிமிடம் குட்டித் தூக்கம் மேற்கொள்வதால், எதிலும் சிறப்பாக கவனத்தை செலுத்த முடியும்.

காரணம் நம் உடல் 55-60% நீரால் ஆனது. உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும் போது, அதனால் தலைவலி மட்டுமின்றி, இதர ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? உடலுழைப்பைப் பொறுத்து, ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அத்தகைய நீர்ச்சத்தை நீரின் மூலமாகவோ அல்லது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளின் மூலமாகவோ பெறலாம்.

Share this post

Post Comment